YouTube : அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்.. என்ன என்ன தெரியுமா? - Tamil News | YouTube introduced many new features to make better usage for users | TV9 Tamil

YouTube : அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்.. என்ன என்ன தெரியுமா?

Published: 

18 Oct 2024 16:38 PM

New Features | உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் யூடியூபை பயன்படுத்தி வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு, ஸ்லீப் டைமர், மினி பிளேயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கிய 4 அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

1 / 6உலக

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

2 / 6

செயற்கை நுண்ணறிவு, ஸ்லீப் டைமர், மினி பிளேயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கிய 4 அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

3 / 6

ஸ்லீப் டைமர் : பலரும் யூடியூப் வீடியோவை பார்த்துக்கொண்டு தூங்கிவிடுவது வழக்கம். இதற்கு தீர்வு காணும் வகையில், யூடியூப் ஸ்லீப் டைமர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடியோவை பிளே செய்த உடன் எத்தனை நிமிடங்களில் நிற்க வேண்டும் என்பதை நாமே செட் செய்துக்கொள்ளலாம். 

4 / 6

மினி பிளேயர் : வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறு ஏதேனும் வேலைகள் செய்ய வாய்ப்புள்ளது. ஏதேனும் குறுஞ்செய்திகள் அல்லது போன் கால்கள் வரலாம். எனவே மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யூடியூப் பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளையும் செய்யலாம். 

5 / 6

செயற்கை நுண்ணறிவு : யூடியூபில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பிளே லிஸ்ட் உருவாக்கிக்கொள்ளும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிடித்த தீம்களில் பிளே லிஸ்டை உருவாக்கி பயன்படுத்தலாம். 

6 / 6

User Interface : User Interface-ல் கூட யூடியூப் பல மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இன்னும் எளிமையாகவும், வேகமாகவும் யூடியூபை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்