5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Zomato : உணவு முதல் பொழுதுபோக்கு வரை.. இனி அனைத்தும் ஒரே இடத்தில்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு!

New Application | வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான மக்கள் ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய இரண்டு உணவு டெலிவரி செயலிகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். சொமேட்டோ நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Zomato : உணவு முதல் பொழுதுபோக்கு வரை.. இனி அனைத்தும் ஒரே இடத்தில்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 17 Nov 2024 15:51 PM

இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சோமேட்டோ செயலியில், ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. சோமேட்டோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய அம்சத்திற்கு “District” என அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது.  சொமேட்டோவின் இந்த புதிய அம்சம் மூலம் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக உணவு டெலிவரிக்காக மட்டும் சொமேட்டோ செயலி பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் பயன்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சொமேட்டோவின் இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Airtel : தினமும் 3ஜிபி டேட்டா.. நெட்பிளிக்ஸ் முதல் பிரைம் வீடியோ வரை.. அசத்தல் அம்சங்களை வழங்கும் ஏர்டெலின் 3 திட்டங்கள்!

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொமேட்டோ செயலி

தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் மிக சுலபமாக கிடைத்துவிடுகிறது. குறிப்பாக பொருட்களும் பொதுமக்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்யபப்டுகின்றன. அந்த வகையில் உடைகள், அணிகலன்கள் முதல் உணவு வரை அனைத்தும் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படுகிறது. செயலிகள் மூலம் உணவு ஆர்டர் செய்த 40 முதல் 50 நிமிடங்களுக்குள் பொதுமக்களின் வீடுகளுக்கே உணவு டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் வாடிக்கையாளர்ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, இந்தியாவில் இரண்டு உணவு டெலிவரி நிறுவனங்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

இதையும் படிங்க : Spam Call : ஸ்பேம் கால்களை முற்றிலும் Block செய்வது எப்படி.. இந்த அசத்தல் அம்சம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த சொமேட்டோ

வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான மக்கள் ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய இரண்டு உணவு டெலிவரி செயலிகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். சொமேட்டோ நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி பொழுதுபோக்கு சேவைகளை பயன்படுத்தலாம். அதாவது, சொமேட்டோ நிறுவனத்தின் இந்த District அம்சம் மூலம், டைனிங் சேவைகள், திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட், ஷாப்பிங் உள்ளிட்ட சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

புதியம் அம்சம் குறித்து வெளியான தகவல்

சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தனது பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சொமேட்டோ நிறுவனத்தின் புதிய செயலி அடுத்த 4 வாரத்திற்குள் அறிமுகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் சொமேட்டோவின் இந்த புதிய செயலி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : YouTube : யூடியூப் மூலம் வந்த சிக்கல்.. ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. மோசடி நடந்தது எப்படி?

சொமேட்டோ நிறுவனத்தின் “District” செயலி என்றால் என்ன?

சொமேட்டோ நிறுவனத்தின் இந்த டிஸ்ட்ரிக்ட் செயலி மூலம் உணவகங்கள், திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு, நேரலை நிகழ்வுகள் மற்றும் தங்கும் இடங்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். சொமேட்டோ நிறுவனத்தில் இந்த புதிய அம்சத்தின் மூலம் பயணர்கள் வெவ்வேறு செயலிகளை பயன்படுத்த தேவையில்லை. ஒரே நேரத்தில், ஒரே செயலி மூலம் அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சொமேட்டோவின் உணவு டெலிவரி சேவைக்கு மட்டுமே ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News