5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Zomato : சில்லறை இல்லனா இனி கவலை வேண்டாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ!

Zomato | உணவு ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். எப்பொழுதும் வேலை என நிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த ஆன்லைன் ஆர்டர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை பலு அதிகம் இருந்தாலோ அல்லது ஓய்வெடுக்க விரும்பினாலோ மக்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துக்கொள்கின்றனர். இதற்காகவே ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா ஃபுட்ஸ் உள்ளிட்ட செயளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Zomato : சில்லறை இல்லனா இனி கவலை வேண்டாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 12 Aug 2024 17:01 PM

ஆன்லைன் உணவு ஆர்டர் : முன்பெல்லாம் கடைகளுக்கு சென்று நேரம் செலவழித்து வாங்கிய பொருட்களை தற்போது வீட்டில் இருந்தபடியே வெறும் ஒரு கிளிக்கில் வாங்கிவிடலாம். உணவு முதல் உடை, ஆபரணங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக இந்த உணவு ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். எப்பொழுதும் வேலை என நிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த ஆன்லைன் ஆர்டர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை பலு அதிகம் இருந்தாலோ அல்லது ஓய்வெடுக்க விரும்பினாலோ மக்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துக்கொள்கின்றனர். இதற்காகவே ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா ஃபுட்ஸ் உள்ளிட்ட செயளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயலிகள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில், சொமேட்டோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு சிறாப்பான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி உணவு டெலிவரியின் போது சில்லறை குறித்த பிரச்னைகள் எதுவும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தோசை, ஊத்தாப்பம் வழங்காததால் Zomato-க்கு ரூ.15,000 அபராதம்.. நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி!

சொமேட்டோவின் புதிய அம்சம் என்ன?

உணவு டெலிவரியின் போது, கையில் பணம் கொடுத்து உணவை வாங்க நினைத்தால் உங்களிடம் அதற்கான சரியாக தொகை இல்லாமல் போகலாம். ஒருவேளை ரவுண்டாக பணம் கொடுத்தால் அதற்கு பாக்கி தர டெலிவரி பாயிடம் சில்லறை இல்லாமல் போகலாம். இத்தகைய சூழலில் நீங்கள் மீண்டும் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் தான் சொமேட்டோ ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Har Ghar Tiranga Certificate: ஹர் கர் திரங்கா சான்றிதழ் என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி?

விளக்கத்துடன் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ சிஇஓ

இது குறித்து சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உணவு டெலிவரியின் போது நீங்கள் பணம் கொடுத்து உணவை வாங்க நினைத்தால், சில்லறை குறித்த பிரச்னைகள் வரும். ஆனால் இனி அப்படி நடக்காது. கேஷ் ஆன் டெலிவரியின் போது நீங்கள் பணத்தை டெலிவரி பாயிடம் கொடுக்கலாம். டெலிவரி பாயிடம் போதிய சில்லறை இல்லையென்றால் அந்த மீதி தொகை உங்களது சொமேட்டோ கணக்கில் வரவு வைக்கப்படும். அதை நீங்கள் வரும் நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். உதரணமாக, ஒரு பயணர் ரூ.530-க்கு உணவு ஆர்டர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் டெலிவரியின் போது, டெலிவரி பாயிடம் ரூ.600 கொடுத்தால், பில் தொகையான ரூ.530 போக மீதம் உள்ள ரூ.70 பயனரின் சொமேட்டோ கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Latest News