Aadhaar Card
ஆதார் கார்டு கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் படிப்படியாக முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டது. அப்போது மத்திய அரசு அமைத்த இந்திய தனித்துவ ஆணையத்தின் மூலம் தான் ஆதார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த இந்திய தனித்துவ ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க எண்கள் தான் ஆதார் எண் என அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். அதனால் தான் ஆதார் கார்டு பான் காட்ர்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆதார் கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் அவரை அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. காரணம், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைக்கு விண்ணபிப்பது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாகும். அனைத்திற்கும் மேலாக ஒரு மனிதர் இந்திய குடிமகன் தான் என்பதற்கான ஆதாரமாக ஆதார் கார்டு கருதப்படுவது குறிப்பிடத்தக்கது