Aadi Masam
ஆடி மாதம் என்றாலே தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெண் தெய்வமான அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படும் இந்த ஆடியில் அனைத்து விதமான அம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். அம்மன் கோயில்களில் ஒவ்வொரு ஆடி வெள்ளி என்பது மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆடி வெள்ளிதான் அம்மனுக்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என பல்வேறு விஷேச நாட்களும் இம்மாதத்தில் உண்டு. இந்த மாதத்தில் வரும் பருவகாலத்தில் நல்ல மழை வேண்டியும், நோய்கள் வராமல் தடுக்கவும் வேண்டி அம்மனுக்கு முன்னோர்கள் விரதம் இருந்து திருவிழா கொண்டாடினார்கள். அத்தகைய ஆடி மாத சிறப்புகளை செய்திகளாக நாம் காணலாம்