Actor Soori
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் சூரி. ராமலக்ஷ்மணன் முத்துச்சாமி என்ற இயற்பெயருடன் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர். மறுமலர்ச்சி என்ற படம் மூலம் துணை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். தொடர்ச்சியாக பல படங்களில் எல்லாம் கிடைக்கும் கேரக்டரில் நடித்து நடிப்பு ஆசையை தீர்த்துக் கொண்டார். விடாமுயற்சியுடன் இருந்தவருக்கு 2009ல் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் இருந்து அவர் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். ரஜினி, விஜய், அஜித், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா, கார்த்தி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ஜொலித்தார். 2023ல் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த சூரி இன்றைக்கு ஹீரோ கேரக்டர்களிலும் அசத்தி வருகிறார். தனது விடாமுயற்சி மூலம் திரையுலகில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் சூரி பற்றிய தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.