5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
AIADMK

AIADMK

அஇஅதிமுக எனப்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசியலில் மிகவும் முக்கியமான திராவிட கட்சியாகும். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர். இக்கட்சியை தோற்றுவித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்த அவர், நிர்வாகிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். அறிஞர் அண்ணா மீது எம்ஜிஆர் கொண்ட பற்று மற்றும் அவரின் கொள்கை பிடிப்பால் கட்சியில் அண்ணா பெயர் இடம் பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை” என்ற பெயரில் அதிமுகவின் தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார்கள். தற்போது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். தமிழக அரசியலை அதிமுக தவிர்த்து எழுத முடியாத அளவுக்கு அக்கட்சி மிகப்பெரிய அடையாளமாக திகழ்கிறது. அக்கட்சி தொடர்பான தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

TVK Party: “பொய்.. பொய்” அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

த.வெ.க : அதிமுகவுடன் கூட்டணி என்ற தகவல் முற்றிலும் தவறு என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.