Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராவார். இவரது தந்தையும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்த அன்புமணி தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்ற அவர் பாமகவில் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு அரசியலில் அடியெடுத்து வைத்தார். அன்புமணி 2004 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் அமைச்சரவையில் இளம் வயது அமைச்சர் இவர் தான். தொடர்ந்து 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் திட்டம் வரவும் காரணமானார். இவர் ராஜ்யசபா, லோக்சபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் பற்றிய தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.