Andhra Pradesh
ஆந்திர மாநிலம் என்பது முன்னாள் மாநிலமாகும். மதராஸில் இருந்து தெலுங்கு பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியாக பிரித்து 1956 ஆம் ஆண்டு ஆந்திரா உருவானது. இந்தியாவிலேயே மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே ஆகும். இந்தியாவில் இரண்டாவது நீலமான கடற்கரை கொண்ட மாநிலமும் ஆந்திரா தான். கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் ஆந்திரா மாநிலத்தின் வழியாக ஓடுகிறது. இவற்றின் கழிமுகங்களின் காரணமாக ஆந்திராவில் அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களுக்கு ஆந்திராவில் இருந்து தான் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய தெலங்கானா மாநிலத்தின் ஹைதரபாத் பகுதி ஆந்திரா சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா மாநிலம் பல ஆண்டுகளாக அதன் கலாச்சாரம் மற்றும் உணவுக்கு பெயர் போனது. இவற்றை தவிர ஆந்திராவில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் கொண்டுள்ளது.