AR Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மான் சிறு வயது முதலே இசைக்கருவிகளை கற்பதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். 1992 ஆம் ஆண்டு தமிழில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதுவரை ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அதில் 5 முறை தமிழ் திரைப்படங்களுக்காக பெற்றுள்ளார். சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் 2007 ஆம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் திகழ்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இவர் இசைத்துறையில் வாங்காத விருதுகளே இல்லை என்னும் அளவுக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதனை போற்றும் விதமாக 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தது. நாம் இந்த தொகுப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்பாக அனைத்து தகவல்களையும் காணலாம்