BJP Bharatiya Janata Party
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாஜக எனும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக இந்துத்துவ கொள்கையை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ணா அத்வானி ஆகியோர் இக்கட்சி நிறுவனர்கள் ஆவார். பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் எனும் ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பு உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும் பல மாநில முதலமைச்சர்களை வைத்துள்ளது. அது மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதிநிதிகளை நியமித்து கட்சியை வளர்க்க முயற்சித்து வருகிறது