Cancer
புற்றுநோய்
உலகளவில் அனைத்து வயதினரிடையேயும் புற்றுநோயின் ஆபத்து அதிகரித்து வருகிறது. இது ஆண்டுதோறும் அதிகபடியான மரணத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, இந்த காலத்தில் எவருக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த புற்றுநோய் தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு கொண்டால், அதிலிருந்து தவிர்க்கலாம். புற்றுநோய் என்பது உடலின் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் ஒரு நோயாகும். நுரையீரல் புற்றுநோயானது ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் ஆபத்தான புற்றுநோயாகும். மேலும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும்போது சில அறிகுறிகள் தோன்றும். இவைகளை நாம் எளிதாக எடுத்துக்கொண்டால் பின் நாளில் இவை நம் உயிரை கூட உறிஞ்சலாம். சில புற்றுநோய்களுக்கு அறிகுறிகள் தோன்றுவது கிடையாது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன. புற்றுநோயானது உடலில் எங்கு தொடங்குகிறது என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது