5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Champions Trophy

Champions Trophy

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு இது மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக சிலர் இதை மினி உலகக் கோப்பை என்றும் அழைக்கிறார்கள். இந்த போட்டி 1998 இல் வங்கதேசத்தின் ஹோஸ்டிங் கீழ் முதல் முறையாக நடத்தப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு வரை சாம்பியன்ஸ் டிராபி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் போட்டி நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, உலகக் கோப்பையைப் போலவே, இந்த போட்டியும் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்படுகிறது. இந்த முறை ஐசிசி சாம்பியன் டிராபி வருகின்ற 2025ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

ICC Champions Trophy 2025: பிசிபி – பிசிசிஐ இடையே ஒப்பந்தம்.. இந்திய அணியின் போட்டிகள் மாற்றம்.. எங்கு தெரியுமா?

India vs Pakistan: 2025 சாம்பியன் டிராபியில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தால் அந்த போட்டியும் துபாயில் நடைபெறும். அதேநேரத்தில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்தால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாது என்றும் தெரிகிறது.

ICC Champion Trophy 2025: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுமா..? அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

India vs Pakistan: சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக ஐசிசி வாரியம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை மற்றும் இந்தியா பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ICC Champions Trophy 2025: குறைந்தது ஒரு போட்டியாவது விளையாடுங்கள்.. இந்தியாவிடம் இறங்கிவந்த பாகிஸ்தான் வாரியம்!

India vs Pakistan: 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்திய அணி ஹைப்ரிட் மாடலில் இறுதிப் போட்டி உள்பட அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. அதன்படியே, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் இந்தியா..? எந்த அணி பங்கேற்க வாய்ப்பு..?

BCCI: சாம்பியன் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என மத்திய அரசிடம் இருந்து இந்திய அணிக்கு உத்தரவு வந்துள்ளதாகவும், எனவே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்றும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களை கவர பாகிஸ்தான் புதிய யுக்தி.. சாம்பியன் டிராபியில் பங்கேற்குமா இந்திய அணி?

Champions Trophy: சாம்பியன் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் சென்று எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.

ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாதா..? அப்போ! போட்டிகள் எங்கு நடைபெறும்?

India vs Pakistan: கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்தது. எனவே, மூன்றாவது இடமாக இலங்கையில் இந்திய அணியின் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் இப்போது சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிகளின் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம்.

Asian Champions Trophy: 5வது முறை சாம்பியன்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அசத்திய இந்திய ஹாக்கி அணி!

India Vs China Hockey Final: சீனா ஹாக்கி மற்றும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு இடையேயான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியானது சீனாவின் ஹூலுன்பீர் நகரின் உள்ள மோகி பயிற்சி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முக்கால்வாசி நேரம் வரை இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. போட்டியின் 51வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி வீரர் ஜூக்ராஜ் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.