Chennai
Chennai – சென்னை
தமிழகத்தின் தலைநகரமாய் திகழ்கிறது சென்னை. 70 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர். புகழ்பெற்ற கோயில்கள், நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடன் இன்று வரை தலை நிமிர்ந்து நிற்கிறது. சென்னை என்றாலே பலருக்கு இன்றும் நினைவுக்கு வருவது தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, தலைவர்கள் சமாதி, கூவம் ஆறு, சென்னை சென்ட்ரல், கானா பாடல், கோடம்பாக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ், கோயம்போடு என சென்னையின் பல முகங்களில் நினைவு கூறுவார்கள். வேறு சிலர்கள் பொல்யூசன், டிராபிக்கு, வெயில், கூவம் வாசம், வெள்ளம் என டெம்பிளேட்டாக பல காரணங்களை ஓய சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றிலும் சென்னை இன்று முக்கிய தளமாக விளங்குகிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் உதாரணமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் கடும் வெள்ளத்தால் சென்னை தத்தளிக்கும். ஆனால் எப்படியான பேரிடராக இருந்தாலும் சென்னை நகரம் அதில் இருந்து மீண்டு வந்து புதுப்பொலிவுடன் இருக்கிறது.