5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Chennai Super Kings

Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று அழைக்கப்படும் சிஎஸ்கே அணி தமிழ்நாட்டின் சென்னையை தளமாக கொண்ட ஒரு கிரிக்கெட் கிளப் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியம்தான் சிஎஸ்கேயின் சொந்த மைதானம். சிஎஸ்கே லோகோவில் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலையை ஆரஞ்சு நிறத்திலும், அணியின் பெயர் நீல நிறத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக்கில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதலே விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை அணி ஐந்து முறை கோப்பை வென்றபோதும் எம்.எஸ்.தோனியே கேப்டனாக இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியா சிமெண்ட்ஸ் அணியின் நிறுவனராக உள்ளது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

Read More

IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி மற்றொரு சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தோனி குறித்தான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

Rishabh Pant: மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது ரிஷப் பண்ட்தான். தோனிக்கு சரியான மாற்று வீரராக இப்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.

MS Dhoni: ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டுகிறாரா தோனி?.. சிஎஸ்கே வெளியிட்ட ட்வீட்!

Chennai Super Kings: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அவர் ஓய்வு பெறுவதை அறிவிக்கும் விதமாக தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பியதால் சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இப்படியான நிலையில் நடப்பாண்டு நடைபெற்ற சீசனில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.