Cholesterol
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் கொழுப்பு நம் உடலில் இயற்கையாகவே உருவாக கூடிய ஒரு பொருள். கொலஸ்ட்ரால் பொறுத்தவரை இரண்டு விதங்கள் உள்ளது. ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL – Low density lipoproteins). மற்றொன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL- High density lipoproteins). உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது நல்ல கொலஸ்ட்ரால். இது நமது உடலில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் உடலில் அதிகமாக இருப்பதே ஆபத்தை தருகிறது. அதாவது, கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுப் பொருளாகும். இது இரத்த நாளங்களில் குவிந்து இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். கொழுப்புகள் நிறைந்த உணவு, உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை உண்டாக்கும். எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வது முக்கியம்.