5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Christmas

Christmas

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது கிறிஸ்துமஸ் தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் அனைத்து விதமான தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்த்துகளை உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் தெரிவிப்பர். சொல்லப்போனால் கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து மத மக்களாலும் இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெரும்பாலான நாடுகளில் அரசு விடுமுறையாகும். அதுமட்டுமல்லாமல் பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை குறிக்கும் வகையில் வீட்டில், தேவாலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் குடில் அமைத்து கொண்டாடுவர். அதுமட்டுமல்லாமல் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெறுவதோடு, வீட்டின் வாயிலில் இயேசு பிறந்ததை வழிகாட்டும் வகையில் விதவிதமான ஸ்டார்களும் கட்டப்படும். நாம் இந்த தொகுப்பில் கிறிஸ்துமஸ் விழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக காணலாம்

Read More

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

X mas Festival: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே முதலில் தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தொடர்ச்சியாக கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய இல்ல வாயிலில் விதவிதமான வடிவங்களில் ஸ்டார்களை தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.