5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Cinema Rewind

Cinema Rewind

தமிழ் சினிமா இந்திய திரையுலகில் முக்கிய இடத்தில் உள்ளது. ஊமை படம், கருப்பு வெள்ளை என பயணித்த தமிழ் சினிமா எப்போதும் அடுத்தக்கட்டத்தை நோக்கி தன்னை தயார்படுத்துக்கொண்டே இருக்கிறது. கோலிவுட் என்பது வெறும் தமிழ்நாடோடு மட்டுமின்றி உலக சினிமாக்களை நோக்கி பயணிப்பதும் நடப்பதுண்டு. உலக சினிமா திருவிழாக்களில் தமிழ் படங்கள் இடம்பெறுவதும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபெறுவதும் அதற்குண்டான சான்று. திறமை இருப்பவர்களுக்கு தமிழ் சினிமா என்றுமே கைகொடுக்கும் என்பதற்கு சான்றாக எத்தனையோ புது முகங்கள் நடிகர்களாகவும், திரைத்துறை பின்புலம் இல்லாதவர்கள் திரையுலக கலைஞர்களாகவும் இங்கு ஜொலித்துள்ளனர். ஜொலித்தும் வருகின்றனர். வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி சினிமா மூலம் அரசியல், வாழ்வியல், வரலாறு, கலாசாரம் என அனைத்து விஷயங்களும் மக்களிடையே கொண்டு செல்லப்படுவதும் தமிழ் சினிமாவுக்குண்டான சிறப்பு. அப்படிப்பட்ட சினிமாவில் தொன்று தொட்டு நடந்தது என்ன என்பதை ஒரு மீள்பார்வையாக ரீவைண்ட் செய்யும் பகுதியே இது. பழைய சினிமாவை புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள இது உதவும்

Read More

Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்

வரிசையாக படங்களை தங்கள் கைவசம் வைத்திருக்கும் இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் படங்களான இந்தியன் 2 மற்றும் வேட்டையன் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு வரிசையில் உள்ளது. அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார் கமல். இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Cinema Rewind: காலேஜ் டூரில் நடந்த கலவரம்… விஜய் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

Actor Vijay: நடிகர் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் தனது செல்போனை உபயோகிக்கமாட்டார், அதற்குப் பதிலாக படப்பிடிப்புத்தளத்தில் நடப்பதை அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார் என அவருடன் நடித்த துணை நடிகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறாத போது விஜய் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என பேச்சுக்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை இளைய தளபதி விஜய் என அழைத்து வந்த ரசிகர்கள், பிறகு தளபதி என அழைக்க தொடங்கினர். 

Cinema Rewind: ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ – கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்.. மீள்பார்வை!

Kamal about Rajini: சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவருமே தங்களது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தங்களது இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.