Coimbatore
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோயம்புத்தூர் திகழ்கிறது. தென் இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அறியப்பட்ட கோவை, கல்வி நகரமாகவும், தொழில் நகரமாகவும் இன்று வரை திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாக உள்ளது. கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இப்படி புதிய புதிய தொழில்கள் இணைந்து கோவையை தொழில் நகரமாக உருவெடுக்க செய்தன. இதனால் பல லட்சகணக்கான மக்களுக்கு கோவை வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு நிலவும் குளுமையான சூழல் கோவைக்கு வருவோரை குளிர வைக்கிறது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. மேலும், பவானி, நொய்யல், அமராவதி, ஆழியாறு ஆகிய அணைகளும் உள்ளன. கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாட்சி, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கடை, வால்பாறை ஆகியவை நகராட்சிகளாக உள்ளன. கோவை மாவட்டத்தில் 2 மக்களவை தொகுதிகளும், 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.