Congress
பிரிட்டிஷ் அரசிடம் இந்தியர்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்காக தொடங்கப்பட்டு, பின்னர் விடுதலை இயக்கமாக மாறியது தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாகும். இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. பின்னர் 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் மாறியது. 15-வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என பலரும் கட்சி தலைவரகளாக இருந்துள்ளனர். தற்போது மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக மத்தியில் ஆட்சி இழந்தாலும், இம்முறை நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.