Daily Calendar
இன்றைய காலண்டர் – தினசரி நம்முடைய வாழ்க்கையில் காலண்டர்களின் பயன்பாடு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எந்த ஒரு நாளை தொடங்குவதாக இருந்தாலும் காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை,கௌரி நல்ல நேரம், திசை சூலம், திதி, நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி, சுபமுகூர்த்த தினம், சங்கடகர சதுர்த்தி, அஷ்டமி,நவமி, அன்றைய நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள் என அனைத்து பஞ்சாங்கம் கணிப்புகளையும் பார்த்துவிட்டு தான் செல்வோம்/ செய்வோம். அதேபோல் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ராசி பலன்களும் நாம் தினசரி காலண்டர் உபயோகத்தில் பார்த்து பயன் பெறுகிறோம். பிறக்கும் நேரம் தொடங்கி முதல் இறக்கும் நிமிடம் வரை நம்முடைய வாழ்க்கையில் காலண்டரின் பங்கு என்பது மிக முக்கியமானது. அதில் சொல்லப்பட்டுள்ள நேரம் காலத்திற்கு ஏற்றபடி தான் நம்முடைய செயல்களும் வாழ்க்கையில் அமைய வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இப்படியாக நல்ல நேரம் உள்ளிட்ட பல பஞ்சாங்க கணிப்புகள் கொண்ட தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்