5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Diabetes

Diabetes

நீரிழிவு நோயை நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கலாம். நீரிழிவு என்பது உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நிலையாகும். உங்கள் உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாதபோது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது உடலில் உள்ள ஒரு ஹார்மோன் ஆகும். இதுதான் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஹார்மோன் சரியாக செயல்படாதபோது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில், முக்கிய காரணங்களில் ஒன்று மரபணு, அதாவது, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், அது ஜீன் மூலம் உங்களுக்கு வரலாம். இது டைப்-1 சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. இது தவிர, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றாலும் ஏற்படும். இது டைப்-2 சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது

Read More

பால் சுரப்பை கூட்டும் பாகற்காய்.. தாய்மார்கள் மிஸ் பண்ணிராதீங்க!

Benefits of Bitter Guard: மனிதன் சுவைத்து உண்ண அறுசுவைகள் உள்ளது. அதில் கசப்பு பலராலும் வெறுக்கப்படும் ஒரு சுவையாகும். ஆனால் அந்தக் கசப்பு மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். கசப்பு நிறைந்த பாகற்காயை பலரும் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அதனின் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் கசப்பை சகித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரிச்சம்‌‌ பழம் சாப்பிடலாமா? உண்மை என்ன?

Dates for Diabetes: தற்போதைய வாழ்க்கை முறையால், பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னையாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏற்படும் பரம்பரை பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அதே போல், முறையற்ற வாழ்க்கை முறையாலும் சர்க்கரை தாக்கம் ஏற்படுகிறது.

மூன்று வேளை சாதம் சாப்பிடுகிறீர்களா? இந்தப் பிரச்சினைகள் வரலாம்!

Health Tips: தினமும் சாதம் சாப்பிடுவது நல்லது என்றாலும் சில சமயங்களில் பல உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். சிலர் மூன்று வேளை சாதம் சாப்பிடுவார்கள். உண்மையில் சோறு அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Diabetes Food: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமா..? காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!

Health Tips: சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் காலையில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

World Diabetes Day 2024: சர்க்கரை நோய் என்றால் என்ன..? இன்று ஏன் உலக சர்க்கரை நோய் தினம் கொண்டாடப்படுகிறது?

What is Diabetes: சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று டைப் 1 சர்க்கரை நோய். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. இரண்டு டைப் 2 சர்க்கரை நோய். இது உடல் இன்சுலினுக்கு சரியாக வினைபுரியாதது. அப்படி இல்லையென்றால், இன்சுலின் கணையத்திலேயே குவிந்துவிடுவதாகும்.

Diabetes Food: சர்க்கரை நோயாளிகள் தேனும், வெல்லமும் சேர்க்கலாமா..? இவை பலன் தருமா..?

Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை சர்க்கரை தீங்கு விளைவிக்கும். வெள்ளை சர்க்கரையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நபருக்கும் ஆரோக்கியமானது அல்ல. அதேநேரத்தில், வெல்லம் மற்றும் தேன் ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இவை இரண்டிலும் இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. இது ஆரோக்கியமானதும் கூட.

Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா? ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!

Diabetics Sweets: தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் சுவை மிகுந்ததாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடக்கூடிய இந்த இனிப்புகள் எளிதாக செய்யலாம். இது உடல் நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

Diabetics: நீரிழிவு நோய்க்கு முழு தீர்வு… சாதனை படைத்த சீன மருத்துவக் குழு!

Treatment for diabetics: உணவு, வாழ்க்கை முறையின் மாற்றத்தால் உலகில் அதிக அளவில் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகிறார். அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்கிறார்கள். உலகிலேயே சீனாவில் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் உள்ளார்கள். இந்நிலையில் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செல் மாற்று சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி மருத்துவ உலகில் புதிய சாதனை படைத்துள்ளது சீன மருத்துவக் குழு.

Rajma Benefits : இதயம் முதல் நீரிழிவு வரை.. கிட்னி பீன்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு தீர்வுகளா?

Kidney Beans Benefits : உடல் ஆரோக்கியத்தில் தானியங்களின் பங்கு மிகப்பெரியது. பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள் எல்லாமே பல்வேறு சத்துகளை உள்ளடக்கியுள்ளன. அந்த வரிசையில் கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மா பல்வேறு வைட்டமின்களை கொண்டுள்ளது. ராஜ்மாவைக் கொண்டு விதவிதமான உணவுகள் செய்யப்படுகின்றன.

  • CMDoss
  • Updated on: Nov 18, 2024
  • 11:30 am

Diabetic Retinopathy: கண்களை குருடாக்கும் நீரிழிவு ரெடினோபதி..? இதற்கு சிகிச்சை என்ன..?

Health Tips: ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு உடலின் மற்ற பகுதிகளையும் பாதிப்பது மட்டுமின்றி, கண்களையும் பாதித்து குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இதையேதான் நாம் நீரிழிவு ரெடினோபதி என்று கூறுகிறார்கள். அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.