Diwali
தீபாவளி என்பது ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையை கணக்கிட்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் இதன் பின்னால் மிகப்பெரிய வரலாற்று காரணம் என்ற ஒன்று இருக்கிறது, ஆனாலும் நம் மனதில் தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசு சத்தமும், மத்தாப்பு சிரிப்பும் தான் நினைவுக்கு வரும். ஒருநாள் பண்டிகையை கொண்டாட ஆண்டுமுழுவதும் உழைக்கும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடங்கி பண்டிகையால் குப்பையாகும் ஊரை சுத்தம் செய்யும் ஊழியர்களை வரை இந்நாளில் சொல்வதற்கு ஆயிரம் ஆயிரம் செய்திகள் உள்ளது. கோயில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்கள், புத்தம் புதிய ஆடை வகைகள், சந்தையில் வந்துள்ள புதிய வகை பட்டாசுகள், பாதுகாப்பாக கொண்டாட வெளியிடப்படும் அறிவுரைகள், பலவகையான உணவு மற்றும் இனிப்பு வகைகள் என ஒவ்வொரு நிகழ்வையும் நாம் மிகச்சரியான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.