Fixed Deposit
வைப்புநிதி திட்டம் – பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிதி பற்றாக்குறையை தடுப்பதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஆனால், அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புநிதி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது. இதன் காரணமாக இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. பொது குடிமக்கள் இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். நிலையான வைப்புநிதி திட்டம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு கால அளவீடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து சேமிப்பின் தொடக்கத்திலே மொத்த தொகையையும் செலுத்த வேண்டும். பிறகு திட்டத்தின் முடிவில், வட்டியுடன் கூடிய மொத்த தொகையையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.