Food Recipes
மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இதில் முதலிடத்தில் இருப்பதே உணவுதான். நீரின்றி அமையாது உலகு என்றால், உணவின்றி அமயாது உயிர் என்பதும் உண்மைதான். ஆதிமனிதன் வேட்டையாட துவங்கியதே உணவிற்காகவும், பாதுகாப்பிற்காகவும்தான். எனவே உணவு நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆரக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டாலே போதும். இன்றைய காலகட்டத்தில்தான் தேவையற்ற உணவு தேவையில்லாத உணவு என்றெல்லாம் பிரித்து வைத்திருக்கிறோம். உணவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், வீணாக்காதீர்கள். ஆதிமனிதனைப் போல் அல்லாமல் மாமிசங்கள், காய்கறி, பழங்கள், தானியங்கள், கீரைகள் என எல்லாவற்றையுமே சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நல்லதுதான். ஆனால் எதை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்பதையும் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவில் பிடித்தது பிடிக்காதது என எதையுமே ஒதுக்காதீர்கள், அதுகூட கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள். எது எதற்கோ நேரம் செலவிடும் நாம் நம் வயிற்றுக்கும் நாக்குக்குமான நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். உணவிற்காகத்தான் இத்தனை மெனக்கெடல்களும், எனவே அதை ஒதுக்கிவிட்டு வேலை வேலையென ஓடிக்கொண்டிருக்க நினைக்காதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரக்கியமான உடல்நிலை இருந்தால்தான் நாம் நினைத்ததை நினைத்தபடி நடத்தமுடியும். அப்படியான உணவு பிரியர்களுக்கு ஏற்ற இடம் இதுதான். விதவிதமான உணவு வகைகளை எப்படி எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம் என விளக்குகிறது இந்த பகுதி..!