G V Prakash Kumar
ஜி.வி.பிரகாஷ்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் நடிகராகவும் திகழ்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவு முறை என்ற அடையாளத்தோடு அவரது படங்களில் சில பாடல்களில் பாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டு வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி,ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணின் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சூரரைப்போற்று படத்துக்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். 2015 ஆம் ஆண்டு டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனக்கென இளம் ரசிகர்களை கொண்டுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய தகவல்களை நாம் இங்கு காணலாம்.