Gold Rate
இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. ஆனால், தங்கம் விலை என்பது நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையை பொறுத்தவரை உலக நாடுகளின் நடவடிக்கை, உலக நாடுகளின் முதலீடு உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து தினம் தோறும் ஏறி இறங்குகிறது. தினமும் காலை, மாலை தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை எளிதாக தெரிந்துகொள்ளவே இந்தப்பக்கம். தினம்தோறும் விலை நிலவரம் இங்கு அப்டேட் செய்யப்படுகிறது.