Hansika Motwani
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் ஹன்சிகா. அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல், நடிகர் விஜய் உடன் வேலாயுதம், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் இப்படி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.