Indian cricket team
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறது. இது ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்க்ர்ட் அரங்கில் டீம் இந்தியா மற்றும் மென் இன் ப்ளூ போன்ற பெயர்களிலும் அன்போடு அழைக்கப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் 1000க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில அணிகளில் இதுவும் ஒன்று. ஒட்டுமொத்தமாக, இந்திய கிரிக்கெட் அணி தற்போது சுமார் 1800 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவும். டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும் கேப்டனாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும், 2007 மற்றும் 2024 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வகிக்கப்படுகிறது.