5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
IPL

IPL

இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்

Read More

IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் 1574 கிரிக்கெட் வீரர்கள்.. எந்த நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் பங்கேற்பு?

IPL 2025: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்திய வீரர்கள் 48 கேப்டு வீரர்களும் (அனுபவம் வாய்ந்த வீரர்கள்), 1117 அன்கேப்டு வீரர்களும் (புதிய வீரர்கள்) உள்ளனர்.

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? இடம், தேதியை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!

IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பங்கேற்க அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 91 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் 76 வீரர்கள் பதிவு செய்து 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர்கள் வீரர்கள் 52 பேர் பதிவு செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

IPL 2025 Retention: கடந்த சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. அன்று முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டனை தேடி வருகிறது.

IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!

IPL 2025 Retention: ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது மொத்தமாக 47 வீரர்களை தக்கவைத்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 5 வீரர்களை தக்கவைத்துள்ளன.

IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!

Rishabh Pant: டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.16.5 கோடிக்கு அக்சர் படேலையும், ரூ.13.25 கோடிக்கு குல்தீப் யாதவையும், ரூ.10 கோடிக்கு டிரஸ்டன் ஸ்டப்ஸையும், ரூ.4 கோடிக்கு அபிஷேக் போரலையும் தக்க வைத்துள்ளனர். இருப்பினும், ஐபிஎல் 2025ல் டெல்லி அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணி இதுவரை தெரிவிக்கவில்லை.

IPL Retention 2025: 3 கேப்டன்கள் உட்பட 6 நட்சத்திர வீரர்கள்.. வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

IPL 2025 Top Player Retention: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு, அனைத்து 10 ஐபிஎல் அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர்களில் சிலரையும் அணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஆர்ச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 6 வீரர்கள் அணியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்களை பார்க்கலாம்.