Israel
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று இஸ்ரேல். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனி நாடு உருவாக்கப்பட்டது. நாடு உருவான ஒரு சில நிமிடங்களிலேயே அதற்கு அங்கீகாரம் வழங்கியது அமெரிக்கா. உலகம் முழுவதும் யூதர்களுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த நாடு உருவாக்கப்பட்டதில் இருந்தே மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தான் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு காரணமே இஸ்ரேல் அமைந்துள்ள பகுதி தான். இஸ்ரேலை சுற்றி லெபனான், சிரியா, எகிப்து, துருக்கி, ஏமன் உள்ளிட்ட எதிரி நாடுகள் அமைந்துள்ளன. இஸ்ரேலை சுற்றி எதிரி நாடுகள் பல இருந்தாலும், இன்றும் பலமாக இருப்பதற்கு காரணம் அதனின் நட்பு நாடுகள் தான். வரலாற்று ரீதியாக அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு உதவுகிறது. குறிப்பாக ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பலம் வாய்ந்த இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தொடுத்த போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் போரை நடத்தி வருகிறது இஸ்ரேல்