Jasprit Bumrah
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது வித்தியாசமான பந்துவீச்சும் துல்லியமான யார்க்கர்களும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பும்ரா படைத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா கடந்த 1991ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தார். ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கியதன் காரணமாக பும்ரா, 5 ஜனவரி 2018 அன்று நியூலேண்ட்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்காக தனது டெஸ்ட் அறிமுகமானார். அந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்திருந்த பி டி வில்லியர்ஸை கிளீன் பவுல்டு செய்து வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார். இதற்குப் பிறகு, பும்ரா ஜனவரி 2016 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். அவ்வளவுதான் இந்திய அணிக்கு மிக நீண்ட காலத்திற்கு பிறகு, ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மூலம் கிடைத்தது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ஜஸ்பிரித் பும்ரா கோவாவில் மாடலும் ஒளிபரப்பாளருமான சஞ்சனா கணேசனை மணந்தார்.