Kajal Aggarwal
தமிழில் நடிகர் பரத் உடன் ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் காஜல் அகர்வால். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம்ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்