Kamal Haasan
கமல்ஹாசன்
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனக்கென தனியிடம் பிடித்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமா வரலாற்றை எழுதினால் அதில் கமல்ஹாசன் என்ற பெயருக்கு என தனியாகவே புத்தகம் போடும் அளவுக்கு மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். 1965ல் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானார். தொடர்ந்து நடன உதவி இயக்குநராக இளமை பருவத்தில் எண்ட்ரீ கொடுத்தார். பின்னர் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுதுபவர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர். இந்திய சினிமாவில் இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை எல்லாம் என்றோ முயற்சித்து பார்த்தவர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தேசிய விருது, மாநில அரசு விருது, பிலிம்பேர் விருது என பெறாத கௌரவம் கிடையாது. பெரியதிரை மட்டுமல்லாது சின்னதிரையிலும் அவர் தனது முத்திரையை பதித்துள்ளார். சினிமாவையும், அரசியலையும் ஒருசேர கையாண்டு வரும் கமல்ஹாசன் பற்றிய தகவல்களை நாம் காணலாம்.