Kamala Harris
கமலா ஹாரிஸ்
கஃலிபோர்னியாவில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவரது தாய் ஷியாம கோபலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீமாகக் கொண்டவர். தடகள வீரரான கமலா ஹாரிஸ், 1990ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2010 மற்றும் 2014 என இரண்டு முறை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமை இவருக்கே சேரும். இதன்பின், 2017ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கமலா ஹாரிஸ், அதே ஆண்டில் செனட் உறுப்பினராக பொறுப்பேற்றார். பின்னர், 2020ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார். இருப்பினும், உட்கட்சி தேர்தலில் வென்ற ஜோ பைடன், தன்னுடைய துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்தார். பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற, கமலா ஹாரிஸ் துணை அதிபரானார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றார்.