5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Kanimozhi

Kanimozhi

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலவருமான கலைஞர் கருணாநிதியின் மகள். இவர் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற பேரவைக்கு திமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். மகளிர் அணி செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த கனிமொழி, திமுகவின் துணை பொதுச் செயலாளராகும் இருந்து வருகிறார். 2ஜி அலைக்கற்று விவகாரத்தில் திகார் சிறையில் இருந்தார், பின்னர் உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என கூறி அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். திமுகவில் கனிமொழிக்கென தனி கூட்டமே உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனிமொழியின் ஆதரவாளர்கள் அதிகம். கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். வெள்ளத்தால் தூத்துக்குடி கடுமையாக பாதிக்கப்பட்ட போது களத்தில் இறங்கி பணியாற்றியவர். நாடாளுமன்றத்தில் இவர் எழுப்பிய கேள்விகளும் ஆற்றிய உரையும் பெரிதும் பேசப்பட்டது

Read More

திமுகவில் அதிகார போட்டியா? உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி.. துணை முதல்வர் விளக்கம்!

தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. ஏற்கனவே, திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் அதிகார போட்டி நிலவி வருவதாக பேசப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்ளாதது பேசும் பொருளாக மாறியது.