Karthigai Deepam Festival
கார்த்திகை தீபத் திருவிழா
தமிழ் மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் தீபத் திருவிழா தான் நினைவுக்கு வரும். நம் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மிகவும் பிரபலம். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதோடு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் தனது சக்தியை வெளிப்படுத்தும் வகையில் நெருப்பின் வடிவமாக மிளிர்ந்தார் என புராண ரீதியாக காரணங்கள் சொல்லப்படும் நிலையில் இந்த பண்டிகை தென் மாநிலங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாம் இந்த தொகுப்பில் கார்த்திகை தீபத்திருவிழா குறித்த அனைத்து தகவல்களையும் காணலாம்.