Madurai
மதுரை
இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. தமிழ் பண்பாட்டின் தலைநகரும், வரலாற்றின் மையமும் மதுரை தான். வைகை நதி ஓரம் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவானது மதுரை நகரம். சங்க காலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றை கொண்டுள்ளது. அதாவது, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆண்ட மண்ணாக மதுரை உள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு, மொழி, கலாச்சாரத்தில் மதுரை இன்று வரை சிறந்து விளங்கி வருகிறது. பலவிதமான வணிகங்களுக்கு மையாகவும் மதுரை திகழ்கிறது. மதுரை நகரத்தின் மத்தியல் மிகவும் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், அதையொட்டி திருமலை நாயக்கர் அரண்மனை, விளக்குத்தூண், சிம்மக்கல், கீழ வாசல், மாசி வீதிகள், தெப்பக்குளம், வைகையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம், காந்தி அருங்காட்சியகம் என மதுரையின் வரலாற்றை சொல்லும் இடங்கள் இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன. அதேபோல, பலவகை உணவுகளுக்கு பெயர் பெற்ற நகரமாக மதுரை உள்ளது. மேலும், கல்வி, சுகாதாரம், வேலை என அனைத்திலும் சென்னை, கோவை அடுத்து மிகப்பெரிய மாநகராட்சியாக மதுரை விளங்குகிறது. மதுரையில் ஒரு மக்களவை தொகுதியும், மேலூர், மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ளன.