MK Stalin
மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.