Ms Dhoni
கேப்டன் கூல் என்ற பெயரில் உலகப்புகழ் பெற்ற எம்.எஸ்.தோனி, உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். இவரின் தலைமையின்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார். எம்.எஸ்.தோனி கடந்த 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பீகாரில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். தோனியின் தந்தையின் பெயர் பான் சிங் மற்றும் தாயின் பெயர் தேவகி ஆகும். உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள லாம்கடா தொகுதியில்தான் தோனியின் பூர்வீக கிராமம் உள்ளது. தோனிக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்தில் இருந்தே தோனி பேட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் என பல விளையாட்டுகளில் பங்கேற்று சிறந்து விளங்கினார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தபோது, 2004ம் ஆண்டு தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி எம்.எஸ்.தோனி தனது பள்ளி தோழியான சாக்ஷி சிங் ராவத்தை மணந்தார். இவர்களுக்கு தற்போது ஜீவா என்ற மகளும் உள்ளார்.