5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Mumbai Indians

Mumbai Indians

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஐபில்லில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்களும் உள்ளனர். மும்பையில் உள்ள வான்கடே மைதானம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமாகும். கடந்த 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் பிராண்ட் மதிப்பு சுமார் 9,809 கோடிகள் (அமெரிக்க நாணயத்தில் 115 மில்லியன் டாலர்கள்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக உள்ளார். 2023 சீசனுக்கு முன் மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவராக ரோஹித் சர்மாவும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக லசித் மலிங்காவும் உள்ளனர்.

Read More

IPL 2025: ரோஹித்துக்கு அடிபோடும் பஞ்சாப் கிங்ஸ்.. மும்பை அணியின் முடிவு என்ன..?

Rohit Sharma: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஐபிஎல் 2024ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்து, ஒட்டுமொத்த அணியிலும் ஒற்றுமையின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

Suryakumar Yadav: கேப்டனாக அழைக்கும் கொல்கத்தா.. மும்பையை விட்டு வெளியேறுவாரா சூர்யகுமார் யாதவ்..?

IPL 2025: ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் வந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, வேறு சில அணியில் இணைந்து விளையாட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

Mumbai indians: ரோஹித் சர்மா உள்பட 4 வீரர்களை கழட்டிவிடுகிறதா மும்பை இந்தியன்ஸ்? அடுத்த கேப்டன் யார்?

IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் சூர்யகுமார் யாதவை தக்கவைத்துக்கொண்டு அடுத்த சீசனுக்கான புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் நியமிக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mumbai Indians: சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐயின் வான்கடே அலுவலகத்தில் ஐபிஎல் அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியை சேர்ந்த அனுபவமிக்க வீரர்களை விடுவிக்க போவதாக அதிர்ச்சிகர தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஒரு வீரரும் விடுவிக்கப்பட இருக்கிறார்.

ஐபிஎல் 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய மும்பை அணி..!

IPL 2024 : நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பெற்றதால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது. 

ஐபிஎல் 2024: ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை.. தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி உள்ளது. மும்பை அணியின் மோசமான ஆட்டமே இந்த தோல்விகளுக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடரும் மும்பை அணியின் தோல்வி.. மும்பை அணியின் நிலைக்கு என்ன காரணம்..!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வான்கடேவில் சிஎஸ்கேவுக்கு வசமாகுமா வெற்றி..? – சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.