Mutual Funds
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டு கருவியாகும். இந்தத் திட்டத்தில், பல முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள், பத்திரங்கள் என பல்வகைப்பட்ட போர்ட்ஃபோலியோ மூலமாக பணம் திரட்டப்படுகிறது. மேலும், இது கூட்டு உரிமை கொள்கையை அடிப்படையாக கொண்டது. இதில் எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் எனப்படும் மொத்த சிங்கிள் முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில், எஸ்.ஐ.பி என்பது சிறுக சிறுக சேமிப்பதாகும். லம்ப்சம் எனப்படும் சிங்கிள் பேமெண்ட் செலுத்தி நிதியின் வளர்ச்சிக்காக காத்திருப்பது ஆகும். பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் என்றால் பங்குச் சந்தை முதலீடு, ஆபத்துக்கள் நிறைந்தது என்ற கருத்து நிலவுகிறது. இதில், உண்மை இல்லை. முழுமையாக ஈக்விட்டி சாராத திட்டங்களும் உள்ளன. இந்த முதலீட்டில் ஸ்மால், மிட்கேப் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்ட்டுகள் முதன்மையானதாக உள்ளன. இதற்கிடையில் அதிக ரிஸ்க், அதிக வளர்ச்சி என்ற கருப்பொருளை கொண்ட கான்ட்ரா உள்ளிட்ட திட்டங்களும் உள்ளன. எந்த வகையான ஃபண்ட்-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முதலீட்டாளரின் விருப்பத்தை பொறுத்தது.