Navratri
இந்து பண்டிகைகளில் மிக முக்கியமானது நவராத்திரி விழா. இந்த விழா இந்தியா முழுவதும் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பதற்கு 9 இரவுகள் என்பது பொருள்படும். சரியாக நிலவு தென்படாத அமாவாசை தினத்துக்கும் அடுத்த 9 நாட்கள் நவராத்திரி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையின்படி நிலவின் முதல் 9 நாட்கள் பெண் தன்மை இருப்பதாகவும், அதனால் கடவுள் தேவிக்கு இது சிறந்த நாட்களாகவும் கருதப்படுகிறது. கடைசி நாளான 9 வதுநாள் நவமியாகும். இந்த தினத்தை நாம் ஆயுத பூஜை, விஜய தசமி என கொண்டாடுகிறோம். இந்த 9 நாட்கள் தேவி கடவுள் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த தினத்தில் கொலு பொம்மைகள் வைத்து தினம் தினம் தேவி வழிபாடு செய்வார்கள். விரதம் இருத்தல், கொலு பொம்மைகள் வைத்தல், கச்சேரிகள், ஆன்மீக சொற்பொழிவு என என இடத்துக்கு இடம் இந்த 9 நாட்கள் கொண்டாட்ட நிலையில் இருக்கும். நவராத்திரி தொடர்பான ஆன்மிக செய்திகளை இந்த தலைப்பின் கீழ் படிக்கலாம்