Olympics
விளையாட்டு போட்டிகளில் மகா சங்கமம் என்று ஒலிம்பிக் போட்டிகள் அழைக்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் மிகப்பெரிய கனவு. இந்தநிலையில், இந்த ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்ப்க் 2024க்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதில் சுமார் 10 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியைப் பொறுத்தவரை, இம்முறை அதிகபட்சமாக மொத்தம் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த அணியில் 70 ஆண் மற்றும் 47 பெண் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இதில், 117 விளையாட்டு வீரர்களுடன் 140 துணை ஊழியர்கள் பாரிஸ் சென்றனர். தடகளப் போட்டியில் அதிகபட்சமாக 29 வீரர்களும், துப்பாக்கி சுடுதலில் 21 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.