Optical Illusion
ஒளியியல் மாயை புகைப்படங்கள் நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன. அறிவியலின்படி, கண்கள் காணும் காட்சிகளை மூளை, ஆய்வு செய்கிறது. மூளையின் உதவியால் தான் நாம் பொருட்களை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலையில், ஒளியியல் மாயை புகைப்படங்கள் நமது மூளையின் செயல்திறனை சற்று சோதித்து பார்க்கிறது. இந்த ஒளியிய மாயை, ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை முதலில் பார்க்கும்போது ஒரு உருவம் மட்டுமே இருப்பதாக தோன்றும். ஆனால் புகைப்படத்தை நன்கு உற்று கவணித்தால் மட்டுமே அதில் உள்ள மற்ற உருவங்களையும் கண்டறிய முடியும். இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், முதலில் பார்க்கும்போது ஒரே ஒரு உருவம் மட்டுமே தெரியும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட உருவங்கள் தெரிவதன் மூலம் மனிதர்களின் மனநலன், அவர்களின் பண்புகளையும் கூட தெரிந்துக்கொள்ள முடியும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.