PAN Card
பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண் ஆகும். இதில் PAN என்பதற்கு பெர்மனெண்ட் அக்கெளன்ட் நம்பர் (Permanent Account Number) என்று பொருள். இந்த கார்டில் 10 எண்கள் இலக்க எண் இருக்கும். அதுதான் நிறந்த கணக்கு எண் என அழைக்கப்படுகிறது. இந்த பாண் கார்டு மூலம் ஒருவரின் அனைத்து வணிக செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம். குறிப்பாக, வரி, பணப் பறிமாற்றங்கள், கடன், முதலீடு, நிலம் வாங்குவது மற்றும் நிலம் விற்பது ஆகிய செயல்பாடுகளை ஒரே மையத்தில் வைத்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் வரி ஏய்ப்பை தடுக்க முடியும். இதனால் தான் பான் கார்டு அனைவருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நபர் ஒரு பான் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். பான் கார்டை பொருத்தவரை, அட்டையை பயன்படுத்தும் நபர் தனது வீட்டு முகவரியை மாற்றினாலோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயர்ந்தாலோ பான் கார்டில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.