Pregnancy
கர்ப்பம் – கர்ப்பம் என்பது பெண் கருத்தரிக்கும் ஒரு நிகழ்வாகும். கர்ப்பத்தின் முதல் மாதத்தில், கருவுற்ற முட்டை கருப்பையில் சேர்த்து கொள்வதால், ஒரு பெண்ணின் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். ஒரு பெண்ணின் கர்ப்பம் பெரும்பாலும் கடைசி மாதவிடாய் காலத்தின் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. முதல் மாதத்தில் உள்ள கருவுற்ற முட்டை ஜிகோட் என்று அழைக்கப்படுகிறது. இது பலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகரும்போது விரைவான செல் பிரிவுக்கு உட்படுத்தப்படுகிறது. மூன்றாவது வாரத்தில், அது கருப்பையின் உட்பகுதியில் தன்னை பதித்து கருவாக வளர தொடங்கும். கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று மாதவிடாய் ஏற்படாத நிலைதான். இதனால்தான் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று எண்ணி, பரிசோதனை மேற்கொள்கின்றனர். ழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு பொதுவான அறிகுறியாகும். கர்ப்பத்தின் முதல் மாதத்தில், தாய் மற்றும் வளரும் கருவின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சீரான மற்றும் சத்தான உணவை பராமரிப்பது அவசியம்.