5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Priyanka Gandhi

Priyanka Gandhi

பிரியங்கா காந்தி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள். தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தங்கை. இவர் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். நீண்ட காலமாக அரசியலை விட்டு விலகி இருந்த பிரியங்கா காந்தி, 2004 ஆம் ஆண்டு தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். பின்னர், ஜனவரி 23, 2019 அன்று உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்படி படிபடியாக பல்வேறு அரசியல் ரீதியான நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரியங்கா காந்தி, வயநாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். பிரியங்கா காந்தி இதற்கு முன்னதாக பல அரசியல் மேடையில் பேசியிருந்தாலும், தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் காங்கிரஸ் கட்சியினர் பலரும் சோனியா காந்தியை தொடர்ந்து ஒரு நாள் காங்கிரஸ் கட்சியை இவர் ஸ்திரம்பட வழிநத்துவார் என தெரிவிக்கின்றனர்.

Read More

Priyanka Gandhi: முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..

ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி இதற்கு முன்னதாக பல அரசியல் மேடையில் பேசியிருந்தாலும், தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Wayanad By Election: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடுக்கு இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு எப்போது?

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பிரியங்காவுடன் கைக்கோர்க்கும் மம்தா.. வயநாட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!

வயநாடு மக்களவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்  பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரச்சார செய்வது பற்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட நிலையில், அதற்கு மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Priyanka Gandhi Wayanad: வயநாட்டில் பிரியங்கா காந்தி.. தேர்தல் அரசியலில் சாதிப்பாரா?

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுல் காந்தியின் இளைய சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடுவார் எனவும் அறிவித்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு மூலம் தேர்தல் அரசியலில் என்டரி கொடுக்க உள்ளார். இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, "வயநாடு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி இல்லாததை உங்களுக்கு உணர விடமாட்டேன். நான் கடினமாக உழைத்து அனைவரையும் மகிழ்வித்து நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை செய்வேன்” என்றார்.

வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா.. ரேபரேலி எம்பியாக தொடரும் ராகுல் காந்தி!

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, "ரேபரேலி மற்றும் வயநாடுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களிடம் இருந்து பெற்ற அன்புக்கு நன்றி. பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவார். ஆனால் நானும் அடிக்கடி வயநாட்டிற்கு செல்வேன். வயநாடு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

Priyanka Gandhi Wayanad: வயநாடு தொகுதியில் களம் இறங்குகிறாரா பிரியங்கா காந்தி? தேசிய அரசியலில் ட்விஸ்ட்!

அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. எனவே, அரசியில் ரீதியாக பார்த்தால் ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைப்பார் என கூறப்படுகிறது. அதாவது, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ராஜினாமா செய்யம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் தங்கை பிரியங்கா காந்தியை களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரிய ட்விஸ்ட்! ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நிறுத்தமா? அப்போ பிரியங்கா?

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

“என் தந்தையை வீட்டுக்கு துண்டு துண்டாகக் கொண்டு வந்தேன்” பிரியங்கா காந்தி வேதனை

குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்.