Rahul Gandhi
ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு ஜூன் 19, 1970 இல் பிறந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனும் ஆவார். ராகுல் காந்தி மீது 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு தொகுதி நடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. மத்தியில் எதிர்க்கட்சியாக இந்தியக் கூட்டணி கட்சிகள் அங்கிகாரம் பெற்றது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்.