Rajinikanth
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பேருந்து நடத்துநர் டூ டாப் சினிமா ஸ்டார் என உயர்ந்தவர் ரஜினி. 1970களில் பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ராவுக்கு நடிப்பு மீது ஆசை. அருகில் இருந்த நண்பர்கள் சிவாஜி ராவை ஊக்கப்படுத்த சினிமாவில் நடிப்பதற்காக 1973ல் சென்னை வந்தார் சிவாஜி ராவ். அப்போது சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயின்றார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடியவருக்கு அபூர்வ ராகங்கள் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் ரஜினிகாந்த் ஆனார். இப்படத்தை பாலச்சந்தர் இயக்கினார். தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி பின்னர் முழு நேர ஹீரோவாக மாறினார். அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெற தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தொடக்கம் முதலே அரசியலுக்கு அடிபோட்ட ரஜினி கடைசிவரை அதற்குள் வராவே இல்லை. இதற்கிடையே தான் ரசித்து வந்த சினிமாவை இன்னமும் தொடர்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.